பனிப்பூக்கள் தமிழ் வலையொலி / Panippookkal Tamil Podcast

தமிழகத் தேர்தல் – சத்தியங்களும் சாத்தியங்களும்
2021 ஏப்ரல் மாதம் நடைபெற இருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் சூடுப்பிடித்திருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கையில் அறிவித்திருக்கும் வாக்குறுதிகள் குறித்து திரு. ரவிக்குமார் சண்முகம் அவர்கள் இந்த வலையொலி நிகழ்ச்சியில் விரிவாக பேசியுள்ளார். நிகழ்ச்சியைத் தொகுத்தளித்திருப்பவர், திரு. சரவணகுமரன். முதல் பாகமான இதில் தேர்தல் அறிக்கையின் முக்கியத்துவம், தேர்தல் அறிக்கை தயாரிப்பு முறை ஆகியவற்றுடன் மக்கள் நீதி மய்யம் மற்றும் நாம் தமிழர் ஆகிய கட்சிகளின் தேர்தல் அறிக்கை குறித்து விவரிக்கிறார் திரு. ரவிக்குமார் சண்முகம்.